இன்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5,175 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த அதிகரிப்புக்கு ஏற்ப ஏனைய எரிவாயு சிலிண்டர்களின் விலையும் அதிகரிக்கப்படும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விலை உயர்வு இன்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி புதிய எரிவாயு சிலிண்டரின் விலை 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.