இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளித்துள்ளதாக கப்ரால் உறுதிப்படுத்தியுள்ளார்.
“அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்யும் சூழலில், நான் இன்று எனது ராஜினாமாவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்துள்ளேன்” என்று அஜித் கப்ரால் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.