மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: பொலிஸ் ஊடகப்பிரிவு

Date:

நுகேகொடை- மிரிஹான பகுதியில் நேற்று இடம்பெற்ற கலவரம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற் இந்த மோதலின் போது ஒரு பொலிஸ் பஸ், 1 பொலிஸ் ஜீப், 2 மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன மற்றும் ஒரு தண்ணீர் பீரங்கி ட்ரக் சேதமடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது 17 பொதுமக்கள், 17 பாதுகாப்பு படையினர் மற்றும் 3 ஊடகவியலாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்துள்ளனர்.

போராட்டத்தின் போது காயமடைந்த பொலிஸ், விசேட பொலிஸ் பிரிவு மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...