‘அரசாங்கத்திற்கு எதிர்கால திட்டமொன்று இல்லை’ : ஜீவன் தொண்டமான் பதவி விலகினார்

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தனது இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதன்படி, அரசாங்கத்திலிருந்து வெளியேற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ள நிலையில், பாராளுமன்றத்திலும் ஆதரவு வழங்காதிருக்கவும் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் நேற்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது.

குறிப்பாக மலையகத்திற்கான பல்கலைக்கழகம், ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை, ஆசிரியர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஜனாதிபதி அதற்கு சாதகமான பதிலை வழங்கியுள்ளார்.

எனினும், அரசாங்கத்திற்கு எதிர்கால திட்டமொன்று இல்லாமையினால், அதிருப்தி கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஊடகமொன்றுக்கு கருத்து வெளிட்டுள்ளார்.

இதற்கான இராஜினாமா கடிதத்தை ஏற்கனவே பிரதமருக்கு அனுப்பப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (ஊறுஊ) தலைவர் செந்தில் தொண்டமான்இ பாராளுமன்றத்தில் சுதந்திரமாக இருக்க கட்சி தீர்மானித்துள்ளது.

அதற்கமைய பாராளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக செயற்படுவதற்கான தனது முடிவை அறிவித்த இரண்டாவது கட்சி இ.தொ.கா. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ளுடுகுP) நேற்றைய தினம் அரசாங்கத்தில் இருந்து விலகியதோடு இன்று பாராளுமன்றம் கூடும் போது சுயேச்சைக் குழுவாக செயற்படும் என அறிவித்தது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...