சுயேட்சை எம்.பிக்கள் குழு, 21ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சமர்ப்பித்தது!

Date:

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான மற்றுமொரு பிரேரணை இன்று பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ இந்த பிரேரணையை தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமாக பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சுயேட்சையான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினால் இந்த பிரேரணை கூட்டாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் தேசிய நெருக்கடி குறித்து அண்மையில் பாராளுமன்றத்தில் சுயேட்சையாக மாறிய ஆளும் கட்சியைச் சேர்ந்த 40 எம்.பி.க்கள் சார்பில் அவர் இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.

21ஆவது திருத்தம் தொடர்பான சுயேட்சைக் குழுவின் பிரேரணையில் 20வது திருத்தம் நீக்கப்பட வேண்டும் என்றும் 19வது திருத்தத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கோருகிறது.

அரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது பிரேரணை இதுவாகும்.

இதேவேளை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் 21ஆவது திருத்தம் தொடர்பான யோசனையை நேற்று சபாநாயகரிடம் கையளித்தது.

இந்த யோசனை அந்தக்கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் மற்றும் ஏனைய முக்கிய சீர்திருத்தங்களுக்கு உட்பட்டது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...