நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டும்: கிரியெல்ல எம்.பி!

Date:

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் இரசாயன உரங்களுக்கு தடை விதித்தமையே என ஐக்கிய மக்கள் சக்தியின்  உறுப்பினர் கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஒரே தீர்வு ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகார முறைமையை நீக்குவதேயாகும், 20ஆவது திருத்தச்சட்டத்தை இந்த அரசு நிறைவேற்றும் போது நாடாளுமன்றுக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நாட்டின் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு நாடாளுமன்றில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

எனவே, ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தை நீக்கினால் நாங்கள் நாட்டு பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு முன்வருவதாகவும் கிரியெல்ல எம்.பி. குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...