சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் ரமழான் தினமான மே 1 மற்றும் 3 ஆகிய திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சார சபை தெரிவித்துள்ளது.
மே 2 மற்றும் 4 ஆம் திகதிகளில் அனைத்து பிரதேசங்களிலும் மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வலயங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், பகல் வேளையில் 2 மணி நேரமும், மாலை 5.00 மணி முதல் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மாலை 9.00 மணி வரை.