ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் உள்ளிட்ட அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி பக்கத்தில் அமர்ந்தனர்.
இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது இவர்களை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மேசையில் தட்டி வரவேற்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 12 உறுப்பினரகளும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 11 கட்சிகளை சேர்ந்த 15 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 9 உறுப்பினர்களும் அடங்கலாக 40 பேர் தணி அணியாக எதிர்க்கட்சியில் செயற்படவுள்ளனர்.