அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு, தனியார்துறைக்கும் நிவாரணம்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க!

Date:

நிவாரண வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

அதிகரிக்கப்பட்டுள்ள வாழ்க்கைக்கு செலவுகளை எதிர்நோக்கியுள்ள அரச ஊழியர்களின் ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை பிரதமர் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டது.

இதன்படி, வாழ்க்கை செலவு அதிகரிக்கப்பட்டுள்ளதை கருத்திற் கொண்டு, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு, வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கும் குழுவிற்கு, பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு ஏற்றவாறு, தனியார் துறையினரது சம்பளத்தை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கும் குழுவிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...