இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க எவ்வித திட்டமும் இல்லை: உலக வங்கி

Date:

தெளிவான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிய பண மானியங்களை வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உலக விடுத்து அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள சில நிதித் திட்டங்களை வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கும் நிவாரணம் வழங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாக உலக வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அதநேரம், ‘சில அத்தியாவசிய மருந்துகள், ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு தற்காலிக பணப் பரிமாற்றம், பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு பாடசாலை உணவு, மற்றும் விவசாயிகள் மற்றும் சிறு வணிகங்களுக்கு ஆதரவாக அரசாங்கத்திற்கு உதவுவதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் ஆதாரங்களை நாங்கள் தற்போது மீண்டும் வழங்கவுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச நாணய நிதியம்மற்றும் பிற வளர்ச்சி பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பரந்த அடிப்படையிலான வளர்ச்சியை மீட்டெடுக்க பொருத்தமான கொள்கைகளுக்கு ஆலோசனை வழங்குவதாகவும் உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...