இலங்கையைச் சேர்ந்த ஆஷாத் ஸிராஸ் மலேசிய பல்கலைக்கழகத்தில் உயர்ந்த பதவிக்கு தெரிவு!

Date:

இலங்கையை மலாய் சமூகத்தைச் சேர்ந்த ஆஸாத் ஸிராஸ் மலேசிய சர்வதேச இஸ்லாமிய பலக்லைக்கழகத்தில் PHD பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதே பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் கற்கைகள் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் மத ஒப்பிட்டு ஆய்வுகள் தொடர்பான துறையில் கலாநிதி பட்டப்படிப்புக்காக கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றார்.

மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 30,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

இப்பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய பீடமான இஸ்லாமிய கற்கைகள் மற்றும் மானுடவியல் பீடத்தின் பதினொரு துறைகள் மற்றும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் உள்ளனர்.

இப்பீடத்தின்
2022 – 2023 காலப் பகுதிக்கான தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள இவர், சமய ஆய்வுகள் மற்றும்‌ சமாதான சகவாழ்வு, மற்றும் மதங்களுக்கு இடையேயான புரிதல், குறிப்பாக பௌத்த-முஸ்லிம் புரிதலுக்கான மத ஆய்வுகள் துறையில் தீவிர ஈடுபாடு மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றவராவார்.

அதேவேளை பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சமயப் புரிதலை ஏற்படுத்த இஸ்லாம் மற்றும் பௌத்தத்தின் ஒப்பீட்டு ஆய்விலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நாகரிகங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்: இஸ்லாமும் பௌத்தமும் என்ற புத்தகம் இவரால் வெளியிடப்பட்டது.
பஹன மீடியா பிரைவேட் லிமிடெட் இதனை பிரசுரம் செய்துள்ளமை விசேட அம்சமாகும்.
ஆசாத் சிராஸ் அவர்களுக்கு NewsNowவின் வாழ்த்துக்கள்!

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...