இலங்கை மூத்த அறிவிப்பாளர் புவனலோஜினி நடராஜசிவம் காலமானார்!

Date:

இலங்கை வானொலி- வர்த்தக ஒலிபரப்பின் முதல் பெண் அறிவிப்பாளர்களுள் ஒருவரான, புவனலோஜினி (வேலுப்பிள்ளை) நடராஜசிவம், நேற்று யாழப்பாணத்தில் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முதல் நிலை பெண் அறிவிப்பாளர்களில் ஒருவராக புவனலோஜினி விளங்கி வந்தார்.

புவனலோஜி பிரபல அறிவிப்பாளர் நடராஜசிவத்தின் மனைவியாவார் இவர் கடந்த ஆண்டு ஜனவரியில் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்த மூத்த அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீட் அவரை இழந்து துயருறும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். சகோதரி புவனலோஜினியின் ஆன்மா நற்பேறு அடையப் பிரார்த்தனைகள் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியா கண்டத்திலேயே முதலாவது வானொலி ஒலிபரப்பு நிலையம் இலங்கை கொழும்புவில் ‘கொழும்பு வானொலி’ என்ற பெயரில் நிறுவப்பட்டு 1925, டிசம்பர் 25-ல் ஒலிபரப்பு தொடங்கியது.

அப்போது இலங்கை ஆங்கிலேயர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததால் ஆங்கிலத்திலேயே ஒலிபரப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் இடையிடையே தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளிலும் சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாயின.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...