கடலுக்கு செல்ல வேண்டாம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Date:

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் உயர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, அடுத்த சில மணி நேரங்களில் சூறாவளியாக உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இன்று பிற்பகல் வேளையில், கிழக்கு, மத்திய வங்காள விரிகுடாவில் இது சூறாவளியாக உருவாகும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதன்படி, மறு அறிவித்தல் வரும் வரை அந்த பகுதிகளில் பல நாள் மீன்பிடி படகுகளை இயக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணித்தியாலத்துக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதோடு, கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுமென கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த பிரதேசங்களில் தற்போது மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பலநாள் மீன்பிடி படகுகள் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு சென்றடையுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட...

ஷானி மற்றும் ரவியின் அடிப்படை உரிமைகளை தேசபந்து மீறியுள்ளதாக தீர்ப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவர் அடிப்படை...

சவூதி-துருக்கி-பாகிஸ்தான் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் : அமெரிக்காவின் முஸ்லிம் நேட்டோவா அல்லது வெறும் காகித புலியா?

-லத்தீப் பாரூக் சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான், ஆகிய நாடுகள்,  2026...

பிலிப்பைன்ஸ்: தசாப்தகால போராட்டத்திற்குப் பின் முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நாடாளுமன்றத் தேர்தல்!

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள பாங்சாமோரோ தன்னாட்சிப் பிராந்தியத்தில் (BARMM) வரலாற்றுச் சிறப்புமிக்க...