நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மாணவர் பேரூந்துகள் மற்றும் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
அதேபோல பரீட்சை முடிவடையும் காலத்தில் வழக்கமான ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த சாதாரண தர பரீட்சையின் போது மாலை 6 மணிக்கு பின்னர் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 23ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பரீட்சைக்கான விரிவுரைகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.