சனத் நிஷாந்த-மிலன் ஜயதிலக்க விசேட பாதுகாப்புடன் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தனர்!

Date:

கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க ஆகியோர் விசேட பாதுகாப்புடன் சிறையிலிருந்து இன்று (20) பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இருவரும் பாராளுமன்ற அறையில் இருந்ததை காணமுடிந்தது. இருவரையும் பாராளுமன்றத்திற்கு அழைத்து வருமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நேற்று (19) பணிப்புரை விடுக்கப்பட்டதாக சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் இருவரும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்றும் (20) பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் இருந்தனர்.
சம்பவ இடத்தில் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவ அதிகாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...