ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருவோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது!

Date:

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை தொடர்பாக தமது எதிர்ப்பை முன்வைத்து ஜனநாயக ரீதியில் காலி முகத்திடலிலும் அலரி மாளிகைக்கு முன்னிலும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டவர்கள் மீது இன்று தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமையானது மிகவும் கவலையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகத்திற்கு எதிரான இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இத்தாக்குதல் தொடர்பில் நியாயமான மற்றும் வெளிப்படையான ஒரு விசாரணை நடாத்தப்பட்டு, இதனை மேற்கொண்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் சகல தரப்பினரும் வன்முறையை தவிர்ந்து அமைதியான முறையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

அஷ்-ஷைக் எம். எஸ். எம். தாஸீம்,
பதில் பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

Popular

More like this
Related

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...