தனிப்பட்ட பயன்பாட்டிற்காக தோட்டங்களில் பயிர்களை பயிரிடவும்: விவசாய திணைக்களம்!

Date:

தனிப்பட்ட தேவைக்காக தோட்டங்களில் பயிர்களை பயிரிடுமாறு பொது மக்களிடம் விவசாய திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த நடவடிக்கை பங்களிக்கும் காரணியாக இருக்கும் என விவசாய பணிப்பாளர் நாயகமான கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விதைகள், உரங்கள் மற்றும் ஏனைய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது விவசாய உத்தியோகத்தர்களின் கடமையும் பொறுப்புமாகும் எனவும், விவசாய அதிகாரிகளின் குடியிருப்புகள் மற்றும் பிற இடங்கள் செய்கைக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உள்ளூர் உணவு உற்பத்தியில் குறைபாடுகள் இருப்பது அனைவரும் அறிந்ததே என்றும், நிலவும் நெருக்கடி காரணமாக சில பொருட்களை இறக்குமதி செய்வது மிகவும் கடினமாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

போஞ்சி , வெண்டைக்காய், உளுந்து, தாழை மற்றும் பூசணி, பயறு உள்ளிட்ட கீழ்நாட்டு மரக்கறிகளின் உற்பத்திக்கு தேவையான விதைகள் அல்லது இருப்புக்கள் தொடர்பான பிரச்சினைகள் அல்லது பற்றாக்குறைகள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாட்டில் கரட், பீட்ரூட் மற்றும் சலாது இலைகள் போன்றவைகளின் விதைகள் உற்பத்தி செய்யப்படாததால் தட்டுப்பாடு நிலவுகிறது என்றார்.

இவ்வாறான விதைகளை விரைவாக இறக்குமதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...