புலிகளின் தாக்குதல்கள் தொடர்பான இந்திய உளவுத்துறை எச்சரிக்கையின் காரணமாக பேருந்துகளில் பயணப்பொதிகள் தடைசெய்யப்பட்டுள்ளன!- கெமுனு

Date:

பயணிகளின் பாதுகாப்பிற்காக பேருந்துகளில் தேவையற்ற பயணப்பொதிகளை எடுத்துச் செல்வதை கடுமையாக கட்டுப்படுத்துவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, பயணிகள் தங்கள் பைகளை ‘லக்கேஜ் ரேக்குகளில்’ வைப்பதை விட தங்களுடைய உடைமைகளில் பராமரிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

‘எதிர்வரும் நாட்களில் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாதுகாப்பை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று பிரத்தியேகமாக தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பேருந்து ஊழியர்களுக்கு சங்கம் அறிவுறுத்தியது என்று அவர் கூறினார்.

பஸ்களில் சந்தேகப்படும்படியான பயணப்பொதிகள், மற்றும் நபர்கள் இருந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தினர்.

பயணிகள் தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்

Popular

More like this
Related

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...