‘மக்களுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தயார்’: மகிந்த

Date:

மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் விசேட அறிவிப்பின் பின்னர் மகிந்த பதவி விலகுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. பதவி விலகக் கூடாது என கோரி அலரிமாளிகைக்கு அருகில் பொதுமக்கள் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் அலரி மாளிகைக்கு முன்பாக மக்கள் முன்னிலையில உரையாற்றிய பிரதமர் மஹிந்த,

‘மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயார், எனவும் தான் எப்போதும் மக்களின் நலனுக்காகவே செயற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகக் கூடாது என கோரி ஏராளமான மக்கள் அலரிமாளிகையை நோக்கி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மக்கள் முன் உரையாற்றிய பிரதமர், மக்களுக்காக எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக் கொள்ள தயார் எனவும், பொது மக்களுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தயார் எனவும் சற்று முன் அறிவித்துள்ளார்.

பிரதமர் இன்று விசேட அறிக்கையொன்றை விடுக்கவுள்ளதாகவும், இன்று தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...