ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.
கோதுமை மா விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமையும் உற்பத்தி பொருட்களின் விலையேற்றம் தொடர்பிலும் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையே இதற்கு காரணம் என குறித்த சங்கம் அறிவித்திருந்த நிலையில் கடந்த மாதம் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து இன்று மீண்டும் ஒருமுறை கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.