மே தின பேரணியில் ஹரீன் – சரத் பொன்சேகா கடும் வாக்குவாதம்:’மரியாதை இரண்டு வழிகளிலும் இருக்க வேண்டும்’

Date:

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மே தினக் கூட்டத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரம், ‘திட்டமிடல் தொடர்பான ஒரு வாக்குவாதம், இது ஒரு தவறான புரிதல் என்பதால் இருவரும் பிரச்சினையை தீர்த்துக்கொண்டனர்,’ என்று ஒரு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ நேற்றிரவு இந்த சம்பவம் தொடர்பாக தனது தனிப்பட்ட முகநூலில் பின்வரும் செய்தியை வெளியிட்டிருந்தார்.

‘நீங்கள் சரியானதைச் செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால், கடின உழைப்புக்குப் பிறகு வேறு யாரும் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நில்லுங்கள், மரியாதை இரண்டு வழிகளிலும் இருக்க வேண்டும் எனவும் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளியொன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனினும் குறித்த காணொளியில் ஹரீன் பெர்னாண்டோ, சரத் பொன்சேகாவை கடுமையாக திட்டி தாக்க முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் சரத் பொன்சேகா உரையாற்றுவதற்கு உரையொன்றை ஏற்பாடு செய்து வந்தமை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையினால் இவ்வாறு மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குறுக்கிட்டு மோதலினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...