தினமணியின் ஈகைப் பெருநாள் சிறப்பு மலர் வெளியீடு: பத்திரிகை ஆசிரியருக்கு அறிவுரை வழங்கிய தமிழ் நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவர்!

Date:

தமிழ்நாட்டின் பிரபல பத்திரிகை நிறுவனமான ‘தினமணி’யின் ஈகைப் பெருநாள் சிறப்பு மலர் நேற்றைய தினம் (01) ஞாயிற்றுக்கிழமை சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

சென்னை கவிக்கோ மன்றத்தில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமையில் குறித்த வெளியிட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர். மகாதேவன் சிறப்பு மலரை வெளியிட்டு வைத்ததுடன் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் பெற்றுக்கொண்டார்

இதேவேளை எம். அப்துல் ரஹ்மான் மலரைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரையாற்றினார்.

இதன்போது, தினமணி ஆசிரியரின் நீண்ட அனுபவமிக்க செயலாற்றலைப் பாராட்டியதோடு அவரின் சில ஆக்கங்களைப் பற்றிய தமது மனக்குறைகளையும், அதனால் ஏற்பட்ட ஊடகக் கரையினையும் சற்று வெளிப்படையாகவே விவரித்துப் பேசினார்.

மேலும், செயற்கையாய் மிகைப் படுத்தப்பட்ட கொரோனா நோய் பரவலுக்கு தப்லீக் காரணம், வடநாட்டில் ஏற்பட்ட சில பயங்கரவாத நிகழ்வுகளுக்கு முஸ்லிம்கள் காரணம் போன்ற தினமணி தலையங்கக் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை.

இவைகளெல்லாம் நீதிமன்ற விசாரனை வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டு இறுதியாக நீதிமன்றத் தீர்ப்புகள் உண்மையை உரக்கச் சொல்லியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு தினமணிச் செய்தியின் மாறுபட்ட கோணம் கேள்விக் குறியானது. இவைகளெல்லாம் எங்களைப் போன்றோருக்கு மனவலியைத் தந்த செய்திகள்.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஆக்கங்கள் வராதவாறு பார்த்துக் கொள்வது ஆசிரியரின் கடமை ‘ எனவும் அப்துல் ரஹ்மான் தமது வருத்தத்தை பகிர்ந்துகொண்டார்.

இதேவேளை, தினமணியின் ஸர்ஃப்ராஸ் அவர்கள் நிகழ்ச்சிக்கான மற்றும் மலர் வெளிவருதற்கான ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் டாக்டர் கே.வி.எஸ் ஹபீப் முகம்மது, சென்னைப் பல்கலைக்கழக அரபி துறைத் தலைவர் பேராசிரியர் ஜாஹிர் ஹூசைன், யுனிவர்ஸல் பப்ளிகேஷன் அண்ணன் ஷாஜஹான், இயக்குனர் அமீர் அப்பாஸ் என சமுதாய பிரமுகர்கள் மற்றும் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(தகவல்: காயல் மஹபுப்- பத்திரிகையாளர்)

Popular

More like this
Related

டயானா கமகே வெளிநாடு செல்ல தடை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து...

ரஃபாவில் மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலிற்கான ஆயுத விநியோகத்தை நிறுத்துவேன்: பைடன்

இஸ்ரேல்  காசா நகரமான ரஃபாமீது பாரிய தாக்குதலை மேற்கொண்டால்  இஸ்ரேலிற்கு சில...

அரசாங்க அதிகாரிகள் தொடர்பில் புதிய சுற்றறிக்கை!

கொரோனா -19 தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத்...

பொருளாதார மீட்சிக்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: ஜனாதிபதி

பொருளாதார மீட்சிக்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என...