எரிபொருள் விநியோக பணிகள் நடைபெற்று வருகின்றன: எரிசக்தி அமைச்சர்

Date:

சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட்டின் டெர்மினல்கள் மற்றும் டிப்போக்களில் எரிபொருளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதேநேரம், எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்காக ரயில்கள், அரசாங்கத்திற்கு சொந்தமான மற்றும் விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான எரிபொருள் தாங்கிகள் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சில தனியார் வாடகை தாங்கிகள் உரிமையாளர்கள், விநியோகம் தொடங்கும் டேங்கர்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தமது தொழிற்சங்க நடவடிக்கையை தொடரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை (ஏப்ரல் 30) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள தொழிற்சங்கம், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடரும் எனத் தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்தம் காரணமாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகளும் நேற்றைய தினம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கமும் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம், தமது கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி, எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து சனிக்கிழமை (ஏப்ரல் 30) நள்ளிரவு முதல் விலகுவதற்கு தீர்மானித்துள்ளது.

வேலைநிறுத்தம் காரணமாக நாட்டில் எரிபொருள் விநியோகம் இல்லாத காரணத்தினால் பல எரிபொருள் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

வழமைக்கு மாறாக அதிகரித்துள்ள எரிபொருள் விலைகள் மற்றும் உதிரிபாகங்களின் விலைகள் சுமார் 300வீதம் அதிகரித்துள்ள நிலையில், போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடரப்போவதாக தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

எவ்வாறாயினும், தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சேவையில் இருந்து விலகிக் கொண்டால், எரிபொருள் விநியோகத்தை இடையூறு இல்லாமல் தொடர மாற்று முறைகள் நடைமுறையில் உள்ளன என்று எரிசக்தி அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய விநியோகஸ்தர்களுக்கு எரிபொருளைக் கொண்டு செல்வதற்கான பதிவை உடனடியாகத் திறக்குமாறும், கடமைக்கு சமூகமளிக்கத் தவறியவர்களின் பதிவை இரத்துச் செய்யுமாறும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத புகையிரதங்கள், அரசாங்கத்திற்கு சொந்தமான, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சொந்தமான மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான பௌசர்கள் எரிபொருள் விநியோக சேவைகளை தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருள் போக்குவரத்திற்கான பின்வரும் புதிய வழிகாட்டல்களையும் அமைச்சர் நேற்று அறிவித்தார்.

Popular

More like this
Related

ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தேடும் துருக்கி!

விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டரின் சிதைவு என கருதப்படுவதிலிருந்து வெளிவரும்...

காற்று, மழையுடனான வானிலை தொடரும்!

தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக இலங்கையை ஊடறுப்பதனால் நிலவுகின்ற காற்றும் மழையுடனான...

ஈரான் ஜனாதிபதி நிலை என்ன? பதற்றத்தில் உலக நாடுகள்:

 ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில்,...

புத்தளத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவு: சமூக நல பணியாளர்கள் களத்தில்

புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக புத்தளத்தில் பல...