மே 9, கலவரம் தொடர்பில் டான் பிரியசாத் கைது செய்யப்பட்டார்!

Date:

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி அலரிமாளிகை தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் டான் பிரியசாத்தை கைது செய்துள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க மற்றும் சனத் நிஷாந்த ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் டான் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ, சீதாவக்க பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன மற்றும் களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...