‘அரசாங்கம் வருவாயை அதிகரிக்க வேண்டுமானால் எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும்’:பொருளாதார நிலை குறித்து ரணில் எச்சரிக்கை!

Date:

நாட்டில் தற்போது நாட்டில் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாகவே உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இளம் தொழில் வல்லுநர்கள் குழுவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, ‘எங்கள் கடனை இப்போதே திருப்பிச் செலுத்த முடியாது, எனவே முதலில் கடனைத் திருப்பிச் செலுத்தும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்,’ என்று அவர் கூறினார்.

அரசாங்கம் தேவையற்ற செலவுகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், அரசாங்கம் வருவாயை அதிகரிக்க வேண்டுமானால் எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அரசு திணறுவதால் நமது வங்கித் துறை சீர்குலைந்து விடும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்தார். அதிக பட்சம் இரண்டு வருடங்களில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘உடனடி பொருளாதார நெருக்கடி தீர்க்கப்பட்டவுடன், நாம் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும், அவ்வாறு செய்ய, அரசியல் செயல்முறை மற்றும் பொருளாதார செயல்முறை உட்பட முழு செயல்முறையும் மாற்றப்பட வேண்டும்.

நாட்டின் அரசியல் அமைப்பில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அனைத்து அரசியல்வாதிகளும் வீட்டுக்குப் போவது, கோட்டா வீட்டுக்குப் போவது, ராஜபக்ச வீட்டுக்குப் போவது என்ற நிலைக்கு எதிர்ப்புகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் விளக்கினார்.

நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றம் தவறியமையே இதற்கு காரணம் ,ஒரு முறையான மாற்றத்திற்கு கல்வியில் புதிய அணுகுமுறை தேவை இந்த புதிய கல்வி வழிகளுக்கு இளைஞர்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றார்.

முறைமை மாற்றத்துடன் புதிய அரசியல் முறைமையும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் மாத்திரமன்றி முழு பிரதிநிதிகள் குழுவிற்கும் தீர்வு காணப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எத்தனை அரசியல் கட்சிகள் இருக்க வேண்டும், தேர்தல் முறை எவ்வாறு செயல்பட வேண்டும், விருப்பு வாக்குப் பொறிமுறையை பின்பற்ற வேண்டும் அல்லது புதிய செலவு குறைந்த தேர்தல் முறையை பின்பற்ற வேண்டும்?
மேலும், அரசியல் ஸ்தாபனத்தின் விலையும் கவனிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் விளக்கினார்.

படிப்படியான மாற்றத்துடன் இலங்கை சமூகம் 21ஆம் நூற்றாண்டை நோக்கி முன்னேற வேண்டும் என்றார். நமது கல்வி மற்றும் பணியாளர்கள் அனைத்து மாற்றங்களுக்கும் ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும், இதன் மூலம் நாட்டின் நடுத்தர வர்க்கத்தின் மறுமலர்ச்சியை நாம் காண முடியும்.

சுதந்திரத்தின் போது ஜப்பானுக்கு இணையாக இருந்த இலங்கை இப்போது ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்துள்ளது. 2048இல் நாடு சுதந்திரம் அடைந்து 100ஆவது ஆண்டைக் கொண்டாடும், அதற்குள் நாம் நமது முழுத் திறனையும் அடைந்திருக்க வேண்டும்.

இதை அடைய, ஒரு தேசிய கொள்கைக்கான புதிய இரும்பு கட்டமைப்பை நாம் கொண்டு வர வேண்டும். அது அவ்வப்போது அரசாங்கங்களை மாற்றலாம், ஆனால் அது நாட்டின் திசையை மாற்றாது. இன்று இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் இப்படித்தான் இயங்குகின்றன.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பாராளுமன்றக் குழுக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பொது நிதிக் கட்டுப்பாட்டை மீண்டும் பாராளுமன்றத்தின் கீழ் கொண்டு வருவது முதல் படியாகும். இந்தக் குழுக்களின் பரிந்துரைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்க்க இளைஞர்களுடன் இணைந்து செயல்படும் என்று அவர் கூறினார்.

இதன் மூலம் புதிய பொருளாதாரத்துடன் நாட்டில் புதிய தலைவர்களை உருவாக்க முடியும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்பான அரசியல் நெருக்கடி, அரசியலமைப்புத் திருத்தங்கள் மற்றும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். தனிப்பட்ட நபர்களால் அவற்றைத் தீர்க்க முடியாது, பொதுமக்கள் தலையிட வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர்ரண-pல் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...