இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகேவை நியமிக்கப்பட்டுள்ளர்.
இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
புதிய 24ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
அவர் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று நாளை (ஜூன் 01) தனது புதிய பதவியை பொறுப்பேற்கிறார்.
இதேவேளை இதற்கு முன்னர் இராணுவத் தளபதியாக பணியாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்பு கூட்டுப்படைகளின் பிரதானியாக பதவியேற்றுள்ளார்.