‘உங்களுக்கு எனது ஆதரவு தேவையில்லை என்றால் சொல்லுங்கள், விலகி இருப்பேன்’ – ரணில் விசேட அறிக்கை

Date:

நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மேலும் கூறியதாவது,

‘உண்மையில், நாட்டு மக்கள் சொல்வது மொத்த நாடாளுமன்றத்தையும் விலகச் சொல்கின்றார்கள். இந்த நாளையும் வீணடித்தோம். அரசாங்கமும் எதிர்க்கட்சியும் சண்டையிடுகின்றன. எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சியும் சண்டையிடுகின்றன. இன்று அவர்கள் எங்களைப் பார்க்கிறார்கள், பணம் இல்லை, உணவு இல்லை, ஜூன் மாதத்தில் என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு முடியவில்லையா? இது அந்த மக்களின் நாடு என்பதை இன்று ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது. உங்களால் முடியாவிட்டால், வீட்டிற்குச் செல்லுங்கள். நாங்கள் எதுவும் செய்யவில்லை. அந்த காலகட்டத்தில் நாங்கள் பேசினோம். அதைத்தான் இந்த சபையில் செய்துள்ளோம்.
இன்று இன்னொரு நாள்.

இதைப் பற்றி பேசாவிட்டால், எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க மாட்டோம். அம்பாறையில் நேற்று நடந்தது என்ன? ? எத்தனை காவல்துறை அதிகாரிகளுக்கு பிரச்சனைகள்? எம்.பி.க்களின் வீட்டை சுற்றி வளைத்தால் என்ன நடக்கும் ? நாம் எங்கே போவது?

‘இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதனால்தான் அரசாங்கத்திடம் கூறினோம். தயவுசெய்து பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள், நாட்டு மக்கள் ராஜபக்சக்களை போகுமாறு கேட்கின்றனர்.

நான் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவுள்ளேன். உங்களுக்கு என் ஆதரவு தேவையில்லை என்றால், நான் விலகி இருப்பேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இங்க வந்து சும்மா கத்துவதால் பிரயோசனமில்லை மக்கள் நம்மைத் துரத்திச் சூழ்ந்துகொள்வது நியாயமானதே.

அதாவது இன்று இந்த சபையில் என்ன செய்வது என்று முடிவு செய்வோம். தொலைபேசியிலோ சமூக ஊடகங்களிலோ வரும் புகார்களைக் கேட்டு இன்னும் ஆறு மணிநேரம் இங்கு இருக்க விரும்பவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...