உண்டியல் முறையில் டொலர்களை மாற்ற முயன்ற இருவர் கைது!

Date:

உண்டியல் முறையின் ஊடாக அமெரிக்க டொலரை மாற்ற முற்பட்ட இருவர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் சட்டவிரோதமாக 47,000 அமெரிக்க டொலர்களை மாற்ற முயன்றதாக அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பரிமாற்று முறைமைகளை தவிர்த்து சட்டவிரோதமான முறைகளில் வெளிநாட்டு பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் மத்திய வங்கி அறிவித்திருந்தது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் டொலர்களை உண்டியல் முறையின் கீழ் மாற்ற முயன்ற போது கிடைக்கப்பட்ட இரகசிய தகவல் அடிப்படையில் பொலிஸ்hர் இன்று கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் 40 மற்றும் 52 வயதுடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...