எதிர்வரும் மூன்று நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய கடன் வசதியின் கீழ் மூன்று எரிபொருள் தாங்கிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை 40,000 மெட்ரிக் தொன் டீசலுடன் 19 ஆம் திகதி கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளது. அதற்கமைய 37,000 மெட்ரிக் தொன் பெற்றோலுடன் கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்தடைந்தது.
எனினும் அதற்கு தேவையான டொலரை செலுத்துவதில் தாமதம் சிக்கல் நிலைமை காரணமாக அந்தப் பெற்றோலை இறக்குவதில் சிக்கல் நிலைமை காரணமாக பெற்றோலை தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் எதிர்வரும் நாட்களுக்குள் நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.