எரிபொருள் கோரி நாடளாவிய ரீதியில் போராட்டம்:கொழும்பில் பல வீதிகளில் போக்குவரத்து தடை

Date:

எரிபொருள் வழங்கக் கோரி நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதற்கமைய இந்த போராட்டம் காரணமாக கோட்டே – தலவத்துகொட வீதி பூங்கா சந்தியில் தடைப்பட்டுள்ளது.

கொழும்பு – ஹொரணை பிரதான வீதி பொகுன்னதர பகுதிக்கு அருகில் தடைப்பட்டுள்ளதுடன் காலி வீதி தெஹிவளை பாலத்திற்கு அருகில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு – கண்டி வீதி கன்னொருவ சந்தியில் முற்றாக தடைப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் காரணமாக மாளிகாவத்தை முதல் பஞ்சிகாவத்தை வரை தடைப்பட்டுள்ளது.

அத்தோடு எரிபொருள் கோரிய குழுக்களால் கொழும்பு-கண்டி வீதி கன்னோருவ சந்தியில் பேராதனை முற்றாக தடைப்பட்டுள்ளது.

மேலும் எரிபொருளை கோரி குழுவினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மாளிகாவத்தையில் இருந்து பஞ்சிகாவத்தை வரையான வீதியும் தடைப்பட்டுள்ளது.

பெற்றோல் விநியோகிக்கப்படாது என்பதால் இன்றும் நாளையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் இன்றும் மக்கள் பெற்றோல் நிலையங்களுக்கு வந்து பெற்றோலை பெற்றுக்கொள்கின்றனர்.

இன்றும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் பெற்றோல் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. .

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...