பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று நாளை ஆரம்பிக்கப்படும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், எரிபொருள் நெருக்கடி காரணமாக சுமூகமான செயற்பாடுகள் பாதிக்கப்படலாம். எனவே இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்வதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
‘மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை தேர்வு நிலையங்களில் கடமையாற்ற வேண்டிய தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிரமம் ஏற்படும் என்பதால், அடுத்த நான்கு நாட்களுக்குள் பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.