ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆட்சியாளர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் மறைவுக்கு இரங்கல் புத்தகத்தில் கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவரின் இல்லத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கையெழுத்திட்டார்.
வெளிவிவகார அமைச்சு இன்று (16) விடுத்துள்ள ஊடக அறிக்கையின் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆட்சியாளர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.