ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக இரண்டு பெயர்களை பரிந்துரைத்துள்ளதாகவும், இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அதன் அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் மற்றும் ரோஹினி கவிரத்ன ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் யோசனை குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.