மதங்கள் போதிக்கும் சமூகக் கோட்பாடுகளை சமூக நலனுக்கான செய்திகளாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விடுத்துள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மக்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு சமய வழிபாடுகளில் நோன்புப் பெருநாள் சிறப்பானதொரு கொண்டாட்டமாகும். ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வின் மார்க்கப் போதனைகளின் படி நற்செயல்களைப் புரிய இது ஒரு மனத் தூண்டுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணக்கமான ஒன்றுகூடல்கள், கூட்டு சமரசம், தியாகம், தீமையிலிருந்து மீள்வது, நன்மையைக் கடைப்பிடிப்பது போன்ற ஒருவருக்கு ஒருவர் நிலவுகின்ற கலாசார உறவுகளே சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.