தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முழுமையாக பாதிப்பு!

Date:

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தேவையான டீசல் மாத்திரமே கையிருப்பில் உள்ளது என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தூரபிரதேச போக்குவரத்தினை இன்றும் நாளையும் மாத்திரமே முன்னெடுக்க முடியும் எனவும் அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது குறுகிய தூர போக்குவரத்து சேவைக்காக தனியார் பஸ்கள் மட்டுப்படுத்தப்படும், தூர பிரதேசங்களுக்கான போக்குவரத்து சேவை இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்படும்’.

தனியார் பஸ் போக்குவரத்து சேவைக்கான எரிபொருள் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாத்திரமே கையிருப்பில் உள்ளது.

எதிர்வரும் நாட்களில் தனியார் பஸ் சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையலாம்.
எரிபொருள் விநியோகத்தில் தனியார் பஸ் போக்குவரத்து சேவைக்கு முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையினையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

எதிர்வரும் மாதம் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என குறிப்பிடப்படுகிறது. தனியார் பஸ் போக்குவரத்து சேவை முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்தால் அதன் பொறுப்பை அரசாங்கம் முழுமையாக ஏற்க வேண்டும்.

Popular

More like this
Related

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....