தரமற்ற எரிபொருள் முறைப்பாடுகளுக்கு விசாரணை ஆரம்பம்!

Date:

தரமற்ற எரிபொருளின் தரம் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் சந்தேகங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தெரிவிக்க முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின அவசர தொலைபேசி இலக்கமான 0115 455 130 அல்லது 0115 234 234 ஊடாக முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மண்ணெண்ணெய்யுடன் டீசலை கலப்பதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, எரிபொருளைக் கலந்திருந்தால், அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கை அரசாங்கம் அவசரகால எரிபொருள் இருப்புக்களை கொள்வனவு செய்வதற்காக 200 மில்லியன் டொலர்களை இந்தியாவுடனான கடனுதவியை நீட்டித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்தார்.

மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வரியை நீட்டிப்பது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...