அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பது தொடர்பில் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியீட்டியதையடுத்து, அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இணக்கம் தெரிவிப்பாரா அல்லது ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆட்சி அமைப்பதா என்பது தொடர்பில் தெளிவான உறுதிமொழியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சுயேட்சைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதற்கமைய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்போம் என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
இந்த கடிதத்தில் மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, அனுர பிரியதர்சன யாப்பா, விஜயதாச ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்தக் கடிதத்திற்கு அடுத்த வாரத்திற்குள் பதிலளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் அந்தக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.