நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 17ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், நேற்றும் இன்றும் நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்துள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.