நியாயமற்ற முறையில் சம்பளம் குறைக்கப்பட்டால், மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும்!

Date:

சுகாதார ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டால், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மே 25ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவிப்பு இன்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தமது மத்திய குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

‘சுகாதார அமைச்சில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளால், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மே 25 ஆம் திகதிக்குப் பிறகு, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ஊதியக் குறைப்பு ஏதேனும் செய்யப்பட்டால், தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது,என்று அவர் கூறினார்.

தேசிய சுகாதார சேவைகளை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்கள் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் கோரிக்கைகளுக்கு அமைய இது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் கைது: இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை

பிரபல பாதாள உலக தலைவர் கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இன்னும்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யுமென...

“சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்”: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து அறிக்கை!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளைப் பேணிப்...

இந்திய விடுதலைக்கு ரத்தம் சிந்திய இஸ்லாமியப் பெண்களின் தியாக வரலாறு!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில்,...