காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடிக்கு வன்முறை மூலம் தீர்வு காணப்படாமல் அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
இந்த முக்கியமான தருணத்தில் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக தமது சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்துள்ள பிரேரணை ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிலைமைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் அரசியல் நிலைப்பாட்டை உருவாக்குவதற்கு மக்கள் இந்த தருணத்தில் அமைதியான முறையில் செயற்பட வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.