பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
பெற்றோர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டுமென தாம் உறுதியாக நம்புவதாக தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாது சமையல் எரிவாயு இன்றி பெரும்பாலான குடும்பங்களில உணவு சமைக்க முடியாத காரணத்தினாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு முறையான வழிமுறையின்றி செயற்படுவதே காரணம் எனவும் அமைச்சர் கூறினார்.