450 கிராம் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை 10வினாலும் ரூபாவினாலும் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கே. ஜயவர்தன தெரிவித்தார்.
இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
(Prima Ceylon (Pvt) Limited) கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதாக அறிவித்ததை அடுத்து, பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கோதுமை மாவின் விலை ஒரு கிலோவுக்கு 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.