பாதுகாப்பு காரணங்களுக்காக மகிந்த திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்!

Date:

ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரிமாளிகையை சுற்றி வளைத்த வன்முறையை அடுத்து, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமிற்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (11) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

‘நாட்டின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், முன்னாள் பிரதமர் அவர் விரும்பும் இடத்திற்கு மாற்றப்படுவார்’ என்று பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறினார்.

திருகோணமலை கடற்படைத் தளத்தில் உள்ள ‘Pillow House’ எனப்படும் பங்களாவில் தங்கியிருப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுருந்தது.

மேலதிக பாதுகாப்பிற்காக முன்னாள் கடற்படை தள பணியாளர்கள் Pillow House மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நேவி ஹவுஸ் அமைந்துள்ள இடம் கடலுக்கும், கடற்படை தளத்தின் நுழைவாயிலுக்கும் அருகில் உள்ளது, அதே நேரத்தில் ‘Pillow House’ மாளிகை காட்டில் அமைந்துள்ளது. அதைச் சுற்றி பல இரகசிய இடங்கள் உள்ளன.

Pillow House மாளிகை பாதுகாப்பான இடம் என்பதால், மஹிந்த உள்ளிட்ட குழுவினர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...