கட்சித் தலைவர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது வீடுகளுகளின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விசேட பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்குவதற்கும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டு வீடு திரும்பும் வழியில் தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கட்சித் தலைவர்கள் தமக்கு அறிவித்ததாக அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.