நாரஹேன்பிட்டி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக வெளியான செய்திகள் பொய்யானவை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது எவருக்கும் நடைமுறையில் உள்ள சந்தை விலையை விட குறைவான எரிபொருளும் வழங்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிரப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் பம்பின் விலைகள் புதுப்பிக்கப்படவில்லை எனவும், இது தொடர்பில் அறிக்கையொன்றை அறிவிக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களை சங்கடப்படுத்தும் நோக்கில் சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் இவ்வாறான செய்திகளை வெளியிடுவதாக தெரிவித்த மின்சக்தி அமைச்சர் இது தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.