பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஒதுக்குவதற்கு எதிராக புத்திக பத்திரன கண்டனம்!

Date:

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென பிரத்தியேகமாக எரிபொருள் நிரப்பு நிலையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியதையடுத்து மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘இன்று வரை, எம்.பி.க்கள் எல்லோரையும் போலவே சாதாரண முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்கின்றார்கள்.

முழு நாடும் துயரத்தில் இருக்கும் போது எம்.பி.க்களுக்கு பிரத்யேக இடத்தை ஒதுக்குவது நியாயமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எம்.பி.க்களின் சலுகைகள் குறைக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார், ஆனால் இந்த விளையாட்டு முழு நாட்டு மக்களிடமும் நம்மை வெறுக்க வைக்கப் போகிறது’ என்று அவர் கூறினார்.

இதற்குப் பதிலளித்த அரசாங்கத்தின் தலைமைக் கொறடா, இந்த நடவடிக்கை தற்காலிகமானதுதான்.’இது ஒரு நிலையான உத்தரவு, பாராளுமன்றம் அல்லாத நாட்களில் எம்.பி.க்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்றும் பிரதமர் கூறினார்.

சபையின் சபாநாயகர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

‘சில உறுப்பினர்கள் என்னிடம் திரும்பிச் செல்ல எரிபொருளை வழங்குமாறு என்னிடம் கேட்டார்கள், இல்லையெனில் அவர்கள் தங்குவதற்கு ஒரு ஹோட்டலை முன்பதிவு செய்யும்படி என்னிடம் கேட்டார்கள், எனவே இதுதான் இன்றை நாட்டின் நிலை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...