அலரி மாளிகைக்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகைக்கு அருகில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, போராட்டக்காரர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷ குடும்பத்தினரையும் கூட்டாளிகளையும் பாதுகாப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, இந்தப் போராட்டத்தால் அலரி மாளிகையின் இரு பக்கங்களும் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளன.