பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகக் கூடாது என கோரி அலரிமாளிகைக்கு அருகில் பொதுமக்கள் போராட்டம் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.
பிரதமர் இன்று விசேட அறிக்கையொன்றை விடுக்கவுள்ளதாகவும், இன்று தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ‘
அதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகக் கூடாது என கோரி ஏராளமான மக்கள் அலரிமாளிகையை நோக்கி பேரணியாக செல்கின்றனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகக் கோரி கட்சி சார்பற்றவர்கள் என அழைக்கப்படும் குழுவினர் காலி முகத்திடலில் போராட்டம் நடத்தி 30 நாட்களுக்கும் மேலாகிறது.