பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு குறிக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வாக்குச் சீட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், வாக்களிப்பதும் வாக்குச்சீட்டை காண்பிப்பதும் தவறு என ஆளும் கட்சி உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சார்பில் முதலில் வாக்களித்தார்.
இதன்போது பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் யாருக்கு வாக்களித்தோம் என வாக்கு சீட்டை மஹிந்தவுக்கு சஜித் பிரேமதாஷ காண்பித்துள்ளார்.
எனினும் அந்த நடவடிக்கை முற்றிலும் தவறானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பகீர் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பரிந்துரைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு பகிரங்கப்படுத்திய நிலையில், சஜித் பிரேமதாஸ அதனை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.