பௌத்தம் மதம் இலங்கையையும் பாகிஸ்தானையும் பெரிய அளவில் இணைக்கின்றது!

Date:

ஆனந்த கன்னங்கர

ஆசியாவின் முக்கியமானதொரு கலாசார நிகழ்வைக் குறிக்கும் வகையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் இணைந்து பாகிஸ்தானில் ‘பௌத்த கலாசார நிலையத்தை’ நிறுவ திட்டமிட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் போது இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக இந்த முயற்சிக்கான இலங்கை பிரிவின் இணைப்பாளர் கலாநிதி அசேல விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாகிஸ்தானில் பௌத்த மதத்தை மேம்படுத்துவதற்கு உதவுமாறு புத்தசாசன அமைச்சராக இருந்த அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் பிரதமருக்கு விடுத்த கோரிக்கையின் விளைவே இந்த நடவடிக்கையாகும்.

பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு பௌத்த தூதுக்குழுவை பாகிஸ்தான் பிரதமர் அப்போதே அழைத்திருந்த போதிலும், இது ஏப்ரல் 2021 இலே நடபெற்றது. பிரபல புத்த பிக்குகள் உட்பட 11 பேர் கொண்ட குழு, மேற்படி நோக்கத்தை ஆராய பாகிஸ்தானுக்கு 10 நாள் விஜயம் மேற்கொண்டது.

‘எங்களுக்கு உயர் பாதுகாப்பு மற்றும் ஏனைய அதைன்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன, மேலும் பாகிஸ்தானில் உள்ள அனைத்து பௌத்த கலாச்சார தளங்களையும் ஒரு வழிகாட்டியின் உதவியுடன் பார்வையிட பாகிஸ்தான் அரசாங்கம் ஏற்பாடு செய்து தந்தது’ என கலாநிதி விக்கிரமசிங்க கூறினார்.

மேற்படி இடங்களின் பாதுகாவலர்களுடனும் முஸ்லிம் கிராம மக்களுடனும் இலங்கைப் பிரதிநிதிகள் சுமுகமாக கலந்துரையாடியதாக கலாநிதி விக்கிரமசிங்க கூறினார்.

‘அவர்களுடைய நேச பாவத்தை பார்த்து நாம் பெருமகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தோம்’ என்றும் அவர் கூறினார்.

பாக்கிஸ்தானின் முஸ்லிம் மக்கள் ஏனைய மதங்கள் மீது கொண்டுள்ள மரியாதை மற்றும் நாட்டின் பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அவர்களுக்குள்ள அக்கறையை நேரடியாகக் காண இந்த விஜயம் உதவியதாக இலங்கைப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்த விஜயங்களைத் தொடர்ந்து அவர்கள் இலங்கை தூதரக ஊழியர்கள், பாகிஸ்தான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சர்களை சந்தித்தனர்.

‘இதன் போது லாஹோரில் பௌத்த கலாசார நிலையமொன்றை திறப்பதற்கான அனுமதியை நாங்கள் கோரினோம், அதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதி வழங்கியது மட்டுமன்றி அதற்கு பொருத்தமான நிலத்தையும் எமக்கு இலவசமாக வழங்கியது’ என கலாநிதி விக்கிரமசிங்க நன்றயுடன் தெரிவித்தார்.

அதன்படி, 30 விருந்தினர்கள் தங்கும் வசதியுடன் கூடிய பெரிய மண்டபம் ஒன்று, பௌத்த கலாசார அருங்காட்சியகம், சிலையகம் மற்றும் மொட்டை மாடி தியான மையம் ஆகியவற்றுடனான 3 மாடி கட்டிடம் ஒன்றை அமைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான நிதி மற்றும் பொருள் ஒதுக்கீடுகள் ஏனைய பௌத்த நாடுகளிடமிருந்து நன்கொடையாக பெற திட்டமிடப்பட்டள்ளதாக கலாநிதி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாகிஸ்தானில் பௌத்த மதத்தை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கத்தின் வெகு நாளைய நோக்காகும், குறிப்பாக பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாக்களை இதன் மூலம் ஊக்குவிக்க அந்நாடு எண்ணுகின்றது.

மேற்படி சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு பங்குதாரர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகளின் பயனாக, எதிர்வரும் காலங்களில் இலங்கையிலிருந்து பௌத்தர்களை உள்ளடக்கிய யாத்ரீகர்கள் குழுவொன்றை அனுப்புவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலாநிதி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

‘பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவிற்கு நன்றி கூறும் வகையில், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் 300 பாகிஸ்தான் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்,’ என்றும் அவர் மேலும் கூறினார்.

இலங்கைத் தூதுக்குழுவினர் பாகிஸ்தானில் தங்கியிருந்த நாட்களில், அங்குள்ள அரச அதிகாரிகள் அவர்களின் தங்குமட மற்றும் பயன வசதி மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்ததுடன், நாட்டிலுள்ள பௌத்த யாத்திரிகர்களின் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான அவர்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளிலும் அக்கறை கொண்டிருந்ததாக வண. கிரிந்தே அசாஜி தேரர் தெரிவித்தார்.

தற்போது 90 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தானில் பௌத்த மதம் சுமார் 2,300 ஆண்டுகளை விட பழைமையான சரித்திரத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.

மௌரியப் பேரரசர் அசோகர் காலத்தில் பௌத்தம் இத்தேசத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளதுடன் பௌத்தம் பரவலாக இருந்த குஷன் இராச்சியம், இந்தோ-கிரேக்க இராச்சியம், அதேபோல் பாலா இராச்சியம் மற்றும் மௌரிய இராச்சியம் ஆகியவை அந்த கால கட்டத்தில் தனித்துவமான பௌத்த நாடுகளாக இப்பிராந்தியத்தில் திகழந்துள்ளன.

இருப்பினும், இஸ்லாம் பின்னர் பாகிஸ்தானில் பரவியது. அந்நாட்டில் தற்போது செயல்படும் ஒரே புத்த மடாலயம் இஸ்லாமாபாத்தில் உள்ள பௌத்த ஆலயம் மட்டுமே. இலங்கை, தாய்லாந்து, பர்மா போன்ற பௌத்த நாடுகளிலிருந்து தூதுவர்களும், அரச அதிகாரிகளும் பாகிஸ்தான் வரும் போது இப்புனித ஸ்தலத்திற்கு மத அனுஷ்டானங்களுக்காக விஜயம் செய்வதுண்டு.

2021 ஏப்ரல் 19 முதல் 26 வரை மேற்படி நட்புரீதியான விஜயத்தை மேற்கொண்ட குழு, 26 ஏப்ரல் 2021 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக கொழும்பு திரும்பியது, அதன்போது அவர்களை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் கட்டாக் மற்றும் ஏனைய தூதரக முக்கியஸ்தர்கள் வரவேற்றனர்.

தூதுக்குழுவை வரவேற்ற பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தால் மிகவும் வெற்றிகரமான விஜயத்தை ஏற்பாடு செய்ய முடிந்ததில் தான் பெருமகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை இவ்விஜயம் மேலும் வலுப்படுத்த உதவும் எனவும் அவர் நமபிக்கை தெரிவித்தார்.

மேலும், இவ்விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவதுடன், பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த மத சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை தூதுக்குழுவினருக்கு பாகிஸ்தானில் சகல வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்கியமைக்காக பாதுகாப்பு, தேசிய பாரம்பரியம் மற்றும் கலாச்சார அமைச்சு மற்றும் பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்தார்.

இத் தூதுக்குழுவில் வண. கலாநிதி வல்போல் பியனந்த தேரர், வண. கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர், வண. கலாநிதி பல்லேகம ரத்தனசிறி தேரர் உட்பட 11 பேர பங்கேற்றனர். சிலோன் டூர்ஸ் டிராவல் நிறுவனம் இந்த சுற்றுப்பயணத்தை ஒழுங்கு செய்திருந்தது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...